​சிறந்த சிங்கப்பூருக்காக ஒன்றுபடுங்கள்: பிரதமர் லீ

18 Aug 2019 < 1 min read

Bookmark(0)

No account yet? Register

சிங்கப்பூரை மென்மேலும் மேம்படுத்துவதில் சிங்கப்பூரர்கள் கடப்பாடு கொள்வதோடு சிறந்த சிங்கப்பூர் ஒன்றை தங்கள் சந்ததியினருக்கு ஒப்படைக்கும்படி பிரதமர் லீ சியென் லூங் தமது தேசிய நாள் பேரணி உரையில் கேட்டுக்கொண்டார்.

ஆனால் எதிர்கால சிறந்த சிங்கப்பூரை அடைய சிங்கப்பூரர்கள் ஒன்றுபட்ட மக்களாக இருப்பது அவசியம் என்று அவர் தமது ஆங்கில உரையில் வலியுறுத்தினார்.

அது மட்டுமல்ல. “நேர்மை மற்றும் திறமையான அரசாங்கம் உங்களுடன் இணைந்து செயல்படுவது இன்றியமையாதது,” என்றும் திரு லீ கூறினார்.

இவ்வாண்டு பேரணி உரையில் பிரதமர் லீ மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார்.

குடும்ப சூழ்நிலை எதுவாயினும், இளையர்களை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்வது. பாலர் பள்ளி மற்றும் பட்டப்படிப்பு கட்டணங்களை கட்டுப்படியாக்குவது அதில் அடங்கும்.

சிங்கப்பூரர்களின் ஆயுள் காலம் அதிகரித்திருக்கும் வேளையில் மக்கள் நீண்ட காலம் தொடர்ந்து வேலையில் இருக்க வகை செய்யவேண்டும்.  முதிய ஊழியர்களின் வேலை ஓய்வு, மறுநியமண வயது வரம்பு  மற்றும் மத்திய சேமநிதி சந்தா தொகையை உயர்த்துவது குறித்து அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது என்றார் அவர்.

பருவநிலை மாற்றத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதோடு அடுத்த நூற்றாண்டுக்கு ஆயத்தமாக சிங்கப்பூரை புதுப்பிப்பது ஆகியவை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.