துடிப்பான பொருளியல் –

எல்லோருக்கும் வாய்ப்புகள்

இயல் 1

  • பட்டத்தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுணுக்கர்கள் (PMET) ஆகியோருக்குக் கூடுதல் ஆதரவளித்து, நிறுவனத் தலைவர்களாக அதிகமான சிங்கப்பூரர்களை உருவாக்குவோம்
  • வேலையிட நியாயத்தன்மை சட்டம் வாயிலாக வேலையிட நியாயத்தன்மையை நிலைநாட்டுவதற்கான பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவோம்
  • தொழில்களுக்குரிய நம்பகமான நடுவமாக சிங்கப்பூரை நிலைநாட்டுவோம்
  • நம் தொடர்புத்தன்மையை மேம்படுத்த போக்குவரத்து, மின்னிலக்க உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வோம்
  • போட்டிமிக்க சூழலுக்கு நம்மை முன்கூட்டியே ஆயத்தப்படுத்தவல்ல செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை மேலும் விரைவாகப் பயன்படுத்துவோம்
  • வருங்காலத்திற்கான தூய்மையான எரிசக்தி வளங்களைக் கையகப்படுத்துவோம் – அணுசக்தி ஆய்வுகள் உள்பட
  • வரித் தள்ளுபடிகள், படிப்படியாக உயரும் சம்பள உதவித்தொகைத் திட்டம் உள்ளிட்ட கொள்கைகள்வழி செலவினச் சுமைகளைத் தளர்த்திடுவோம்
  • தொழில்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும், அவற்றின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் துணைபுரிவோம்
  • தொழில்கள் மனிதவளத்தையும் மூலதனத்தையும் பெறுவதை மேலும் எளிதாக்குவோம்
  • நிறுவனங்கள் புதிய சந்தைகளில் விரிவாக்கம் காண துணைநிற்போம்
முந்தையது
அடுத்து