மேலும் கட்டுப்படியான சுகாதாரப் பராமரிப்பு –
மேம்பட்ட சுகாதாரம்
இயல் 5
“நாம் தொடர்ந்து சுகாதாரப் பராமரிப்பை மேலும் கட்டுப்படியாக வைத்திருப்போம். நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பது போக, சிங்கப்பூரர்கள் நோய்த்தடுப்புப் பராமரிப்பு, மேலும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகியவைமூலம் ஆரோக்கியமாக இருக்க ஊக்குவிப்போம்”
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். சிங்கப்பூரர்கள் வாழ்க்கை முழுவதும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மனநலத்தையும் கொண்டிருக்க நாங்கள் விரும்புகிறோம்.
எங்கள் உறுதி
நாம் தொடர்ந்து சுகாதாரப் பராமரிப்பை மேலும் கட்டுப்படியாக வைத்திருப்போம். நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பது போக, சிங்கப்பூரர்கள் நோய்த்தடுப்புப் பராமரிப்பு, மேலும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகியவைமூலம் ஆரோக்கியமாக இருக்க ஊக்குவிப்போம்:
- பிள்ளைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் ‘நன்றாக வளமடைதல்’ எஸ்ஜி செயல்திட்டம்
- பெரியவர்களுக்கு ‘மேலும் ஆரோக்கியமான’ எஸ்ஜி செயல்திட்டம்
- மூத்தோருக்கு ‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி செயல்திட்டம்
- ‘குவீன்ஸ்டவுன் சுகாதார வட்டாரம்’ போன்ற புத்தாக்க முயற்சிகள்

ஓவியரின் கைவண்ணம் : அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை
நாம் சுகாதாரப் பராமரிப்புக் கொள்ளளவை அதிகரித்து, காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவுள்ளோம்.
எங்கள் உறுதி
- நமது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பில் 2030 ஆண்டுக்குள், மேலும் 13,600 படுக்கைகளை அதிகரிக்கவுள்ளோம்
- அடுத்த ஐந்தாண்டில், அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை புதுப்பிக்கப்படும்; புதிய கிழக்குப் பொது மருத்துவமனை திறக்கப்படும்
- நமது சுகாதாரப் பராமரிப்பு, தாதிமை ஊழியரணியை அதிகரிப்போம்
நாம் மனநலத்திற்கான ஆதரவை அதிகரிப்போம்:
எங்கள் உறுதி
- தேசிய மனநல அலுவலகம்
- மனநலச் சேவைகளை மேலும் எளிதாகப் பெறுதல்
- மருத்துவமனை, நீண்டகாலப் பராமரிப்புக் கொள்ளளவு ஆகியனவற்றின் திறனாற்றல் மேம்பாடு, விரிவாக்கம்