ஒன்றிணைந்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்போம்

பொதுச் சுகாதாரமும் பாதுகாப்பும் அவசரப் பணியாக நீடிக்கும்.

நாங்கள்:

  • நமது சுகாதாரப் பராமரிப்புத் தொழிலர்களுக்கும், முன்னிலையில் செயற்படும் அமைப்புகளுக்கும் வலுவான ஆதரவும் சாதனங்களும் அளித்து, அனைவருக்கும் உன்னதமான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவோம். நாங்கள் பொது மருத்துவமனைகளில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு இலவச உள்நோயாளிச் சிகிச்சை அளிக்கிறோம். மொத்தத்தில், நமது அண்மைய வரவுசெலவுத் திட்டங்களில் சுகாதார அமைச்சுக்கு $20 பில்லியன் ஒதுக்கியுள்ளோம்
  • கொவிட்-19 பரிசோதனைகளையும் தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் ஆற்றலையும் முடுக்கிவிடுவோம்
  • கொவிட்-19 சிகிச்சைகள், தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்வோம். இவை தேவைப்படும் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வோம்.

நோய்ப்பரவல் அபாயத்தைக் குறைத்து, பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்க, நாங்கள்:

  • முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்புப் பொருட்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துவோம்
  • அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பான முறையில் கலந்துறவாடப் புதிய நியதிகளை நிலைநாட்டுவோம்
  • எஸ்ஜி தூய்மை இயக்கம் உள்ளிட்ட பெரிய அளவிலான தேசிய முனைப்பின் மூலம் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவோம்.

நாங்கள்:

  • வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடல்நலப் பரிசோதனைகளை நடத்தி முடித்து அவர்கள் பாதுகாப்பாக வேலைக்குத் திரும்ப வழி செய்வோம்
  • வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புதிய நடைமுறைகளோடும் மேம்பட்ட தரங்களோடும் கூடுதலான தங்கும் விடுதிகளைக் கட்டுவோம்

முந்தையது

அடுத்தது

சுகாதாரம் & பாதுகாப்பு

வேலைகள் & பொருளாதாரம்

அன்புள்ளம்

நம்பிக்கை

ஒன்றிணைந்து

ஒன்றிணைந்து வாழ்நாளின் ஆகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்வோம்

⮜ முந்தையது

ஒன்றிணைந்து வேலைகளை உருவாக்கி, திறன்களை வளர்த்துக்கொள்வோம்

அடுத்தது ⮞

எங்கள் கொள்கை அறிக்கையின் ஒரு பிரதியைப் பெற

பதிவிறக்குஇணையத்தில் காட்டு