நாம் ஒரே மக்களாகவும் ஒரே தேசமாகவும் பல நெருக்கடிகளை ஒன்றிணைந்து சமாளித்திருக்கிறோம்:
வாழ்நாளின் ஆகப்பெரிய நெருக்கடியை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்
Source: Ministry of Communications and Information (MCI).
- 1965-ல் மலேசியாவிடமிருந்து பிரிவினை
- 1970-களில் பிரிட்டிஷ் படைமீட்பு
- 1980-களில் பொருளியல் மந்தநிலை
- 1990-களில் ஆசிய நிதி நெருக்கடி
- 2000-களில் செப்டம்பர் 11, சார்ஸ், உலகளாவிய நிதி நெருக்கடி
Source: The Straits Times © Singapore Press Holdings Limited.
இவை ஒவ்வொன்றும் நமக்குப் பெரும் மிரட்டலாக இருந்தன. ஒவ்வொரு முறையும், மக்கள் செயல் கட்சி (மசெக) உங்களுடன், சிங்கப்பூருக்கு, உங்களுக்குப் பக்கபலமாக இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கும், அதிலிருந்து வலுவுடன் மீண்டெழுவதற்கும், சிங்கப்பூரர்களுடன் தோளோடு தோள் நின்று நாங்கள் செயற்பட்டோம்.
கொவிட்-19 ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட காலத்தில் நாம் எதிர்கொள்ளும் மிக ஆபத்தான நெருக்கடி. இது ஒரு பொதுச் சுகாதார நெருக்கடி மட்டுமல்ல, கடுமையான உலகளாவியப் பொருளியல் நெருக்கடியும் கூட. பல வேலைகள் இழக்கப்படும். சில தொழில்நிறுவனங்கள் மூடப்படும். நமது சமூக மீள்திறன் சோதிக்கப்படும். எதிர்காலம் சிரமமானதாக இருக்கும்.
எப்போதும்போல, மசெக சிங்கப்பூரர்களுக்குத் துணைநின்று, ஒருமைப்பாட்டுடன் சேவையாற்றும்.. உங்களையோ சிங்கப்பூரையோ நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். இந்தப் புயலை அனைவரும் பாதுகாப்பாகக் கடந்துசெல்ல உங்களுடன் சேர்ந்து பணியோற்றுவோம். இந்த நெருக்கடிக்குப் பிந்திய சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கும் நாங்கள் தெளிவான திட்டங்கள் வகுத்திருக்கிறோம். நம் மக்களில் முதலீடு செய்து, நமது பொருளியலை மறுகட்டமைத்து, நமது சமுதாயத்தை வலுப்படுத்துவோம். ஒன்றிணைந்து, நாம் முன்பைவிட வலுவாக மீண்டெழுவோம்.
இந்தக் கொள்கை அறிக்கை,