உங்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதற்காக வளர்ச்சியைத் தூண்டி, வேலைகளை உருவாக்குவதோடு, தேவைப்படும்போது சமூக, நிதி ஆதரவும் அளிப்போம்.
ஒன்றிணைந்து பராமரிப்பும் ஆதரவும் அளிப்போம்
உங்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதற்காக வளர்ச்சியைத் தூண்டி, வேலைகளை உருவாக்குவதோடு, தேவைப்படும்போது சமூக, நிதி ஆதரவும் அளிப்போம்.
குடும்பங்கள்
நாங்கள் பொருளியல் முடக்கத்தின்போது வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவளித்தோம்:
- ஒற்றுமைக்கான வழங்குதொகை
- ஒற்றுமைக்கான பயனீட்டுக்கட்டண நிதி உதவி
- ஒவ்வொரு சிங்கப்பூர்ப் பெற்றோருக்கும் ரொக்க வழங்குதொகை
- 50 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு ரொக்க வழங்குதொகை
வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க நாங்கள் தொடர்ந்து உங்களுக்கு உதவுவோம்.
- பராமரிப்பு மற்றும் ஆதரவுத் தொகுப்புத்திட்டம் – அன்றாடச் செலவுகளுக்காக
- மேம்படுத்தப்பட்ட வீட்டுவசதி மானியங்கள் – வீவக வீடுகள் வாங்குவதற்காக
- போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் – பொதுப் போக்குவரத்துக்காக
- கல்வி நிதி உதவிகள் – மேம்படுத்தப்பட்ட கல்வி உதவி நிதி, கல்வி உபகாரச் சம்பளம், போக்குவரத்து, உணவு மற்றும் பள்ளிக் கட்டண நிதி உதவிகள். தொழில்நுட்பக் கல்விக்கழகக் (ITE) கட்டணத்திற்கு 100% நிதி உதவி. சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்திலும் (SIT) சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்திலும் (SUSS) முழுநேரப் பொதுப் பட்டப் படிப்புகளுக்குக் குறைவான கட்டணம்
- சுகாதாரப் பராமரிப்பு நிதி உதவிகள் – 80% வரை பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிதியுதவிகள் மற்றும் சமூக சுகாதார உதவித் திட்டம் (CHAS)
சிறப்புக் கல்வித் தேவைகள்
சிறப்புக் கல்வித் தேவைகள் உள்ள பிள்ளைகளின் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. நாங்கள்:
- சிறப்புக் கல்வித் தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்து, சமூகத்தில் அவர்கள் மேலும் அரவணைக்கப்படுவதை ஊக்குவிப்போம்
- சிறப்புக் கல்வியை மேலும் கட்டுபடியானதாக்குவோம்
- வெவ்வேறு வகையான சிறப்புத் தேவைகளுக்குப் புதிய சிறப்புக் கல்விப் பள்ளிகளைத் திறப்போம்
- சிறப்புக் கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு 18 வயதுக்குமேல் கிடைக்கும் வேலை மற்றும் பராமரிப்புத் தெரிவுகளை அதிகரிப்போம்
பள்ளிக்கு முந்திய கல்வி
நாங்கள் குழந்தைப் பருவக் கல்வி நிலையங்களை கொவிட்-19 கிருமிப்பரவலிலிருந்து பாதுகாப்பானவையாக்குவோம். இதன்வழி, பாலர்கள் தொடர்ந்து கற்கவும், தங்கள் பிள்ளைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றனர் என்ற மனநிம்மதியுடன் பெற்றோர்கள் வேலை செய்யவும் இயலும்.
நாங்கள்:
- பாலர் பள்ளிக் கல்வியைத் தொடக்கப்பள்ளி அளவுக்குக் கட்டுபடியானதாக்க, நிதி உதவிகளை மேம்படுத்துவோம்
- அரசாங்க ஆதரவுபெறும் பாலர் பள்ளி இடங்களை 80 விழுக்காடாக அதிகரித்து, கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளின் எண்ணிக்கையை 60 ஆக இரட்டிப்பாக்குவோம்
- இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழகத்தின் மூலம் பாலர் பள்ளி கல்வித் தரத்தை உயர்த்துவோம்

மாணவர்கள்
நம் மாணவர்கள் நீண்டகாலப் பாதிப்படைவதைத் தடுக்க, இந்தப் பள்ளி ஆண்டை இழக்காதிருப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கிருமிப்பரவலுக்கு இடையிலும் நாங்கள் பள்ளிகளைப் பாதுகாப்பானவையாக வைத்திருந்து, தொடர்ந்து கல்வி கற்க வழி செய்வோம்.
நாங்கள்:
- பலவீனமான பின்னணிகளைச் சேர்ந்த, இந்த நெருக்கடியால் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அதிக ஆதரவும் வழிகாட்டுதலும் அளிப்போம்
- தேசிய மின்னிலக்க அறிவுத்திறன் திட்டத்தைத் துரிதப்படுத்துவோம். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் கணினிச் சாதனத்தை வழங்கி மின்னிலக்க வசதியில் உள்ள ஏற்றத்தாழ்வைக் களைவோம்
- வீட்டிலிருந்து கற்பதைக் கல்வியின் முக்கிய அங்கமாக்குவோம்
- துரிதமாக மாறும் எதிர்காலத்திற்கான அறிவாற்றலையும் திறன்களையும் மாணவர்கள் பெறும் வகையில் கல்விச் சீர்திருத்தங்களைத் விரைவுபடுத்துவோம்
- உயர்கல்வியைச் சீரமைத்து பலதுறைக் கற்றல் முறையை அறிமுகப்படுத்துவோம். இதற்குத் துணையாக, சிறப்புத் துறைகளில் வாழ்நாள் கற்றலை வழங்குவோம்
- நமது இளையர்களை மனவியல் மீள்திறனும் நற்பண்புகளும் கொண்ட நேர்மையான, பரிவுமிக்க தனிமனிதர்களாகத் தயார்ப்படுத்த, நற்குண, குடியியல் கல்விப் பாடத்திட்டத்திற்கு மறுமலர்ச்சி ஊட்டுவோம்.
- கல்வியாளர்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்துடன் நமது ஆசிரியர்களின் நிபுணத்துவத் திறனை மேம்படுத்துவோம்
மூத்தோர்கள்
நம் நாட்டுக்குப் பெரும் பங்காற்றியுள்ள நமது மூத்தோர்மீது நாங்கள் அன்பும் அக்கறையும் கொண்டிருக்கிறோம்.. அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் சௌகரியமாக ஓய்வுபெறவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
நமது மூத்தோருக்கு இன்னும் அதிக மனநிம்மதி அளிக்க, நாங்கள் பின்வருவனவற்றை வழங்கியிருக்கிறோம்:
- முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டங்கள்
- கேர்ஷீல்டு லைஃப்
- மூத்தோர் நடமாட, இயங்க உதவி நிதி
நாங்கள்:
- மூத்தோருக்கான சமூகக் கட்டமைப்பின் மூலமானவை உட்பட, ஆதரவுக் கட்டமைப்புகளை வழங்குவோம்
- பொது உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றுக்கு இலவச நுழைவு உள்ளிட்ட பலவற்றுடன் மூத்தோர் ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும் இருக்க உதவுவோம்
- வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான ஓய்வுகாலச் சேமிப்புத் திட்டம், மேம்படுத்தப்பட்ட மூத்தோர் ஆதரவுத் திட்டம், மூத்தோர் வீட்டுவசதி போனஸ், குத்தகையைத் திரும்ப வாங்கும் திட்டம் ஆகியவற்றின் வழி ஓய்வுகாலத்தில் இன்னும் அதிக நிதியியல் பாதுகாப்பளிப்போம்

மூத்தோர்கள்
நம் நாட்டுக்குப் பெரும் பங்காற்றியுள்ள நமது மூத்தோர்மீது நாங்கள் அன்பும் அக்கறையும் கொண்டிருக்கிறோம்.. அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் சௌகரியமாக ஓய்வுபெறவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
நமது மூத்தோருக்கு இன்னும் அதிக மனநிம்மதி அளிக்க, நாங்கள் பின்வருவனவற்றை வழங்கியிருக்கிறோம்:
- முன்னோடி மற்றும் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத்திட்டங்கள்
- கேர்ஷீல்டு லைஃப்
- மூத்தோர் நடமாட, இயங்க உதவி நிதி
நாங்கள்:
- மூத்தோருக்கான சமூகக் கட்டமைப்பின் மூலமானவை உட்பட, ஆதரவுக் கட்டமைப்புகளை வழங்குவோம்
- பொது உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றுக்கு இலவச நுழைவு உள்ளிட்ட பலவற்றுடன் மூத்தோர் ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும் இருக்க உதவுவோம்
- வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான ஓய்வுகாலச் சேமிப்புத் திட்டம், மேம்படுத்தப்பட்ட மூத்தோர் ஆதரவுத் திட்டம், மூத்தோர் வீட்டுவசதி போனஸ், குத்தகையைத் திரும்ப வாங்கும் திட்டம் ஆகியவற்றின் வழி ஓய்வுகாலத்தில் இன்னும் அதிக நிதியியல் பாதுகாப்பளிப்போம்
சுகாதாரப் பராமரிப்பு
அனைவருக்கும் மேம்பட்ட மருத்துவச் சிகிச்சையும் பராமரிப்பும் கிடைக்கும் வகையில் நமது சுகாதாரப் பராமரிப்பின் கொள்ளளவை விரிவுபடுத்துவோம்.
நாங்கள்:
- பலதுறை மருந்தகங்களின் எண்ணிக்கையை இன்றைய 20-ல் இருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் 32 ஆக அதிகரிப்போம். பீஷான், பிடாடரியில் கட்டப்படும் புதிய பலதுறை மருந்தகங்கள் இதில் அடங்கும்
- சிங்கப்பூர் பொது மருத்துவமனையை மறுமேம்பாடு செய்வோம். தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையைப் புதுப்பிப்போம்
- நொவீனா சமூக மருத்துவமனையை 2022-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிப்போம். கிழக்கு வட்டாரத்தில் சமூக மருத்துவமனையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய மருத்துவமனையை 2030-ஆம் ஆண்டுக்குள் கட்டுவோம்.
2030-ஆம் ஆண்டுக்குள், நம் மக்கள் தொகையில் காற்பகுதியினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். நமது மூத்தோரைக் கவனித்துக்கொள்ள, சுகாதாரப் பராமரிப்புக்கு நாம் அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும்.
இதற்கு நிதியளிக்க, அரசாங்கத்தின் அடுத்த தவணைக் காலத்தின்போது பொருள், சேவை வரி 7 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக உயர்த்தப்படவேண்டும். ஆனால், 2022-ஆம் ஆண்டுக்கு முன் இந்த வரி உயர்த்தப்படாது.
பொருள், சேவை வரி உயர்வை சிங்கப்பூரர்கள் சமாளிக்க உதவுவதற்கு நாங்கள்:
- பெரும்பாலான குடும்பங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் பொருள், சேவை வரி உயர்வைச் செலுத்தும் $6 பில்லியன் உறுதிமொழித் தொகுப்புத்திட்டத்தைச் செயற்படுத்துவோம்.
- நிரந்தரப் பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டுத் திட்டத்தை மேம்படுத்துவோம்
- அரசாங்க நிதி உதவி பெறும் சுகாதாரப் பராமரிப்புக்கும் கல்விக்கும் அரசாங்கம் தொடர்ந்து பொருள், சேவை வரியை ஏற்றுக்கொள்ளும்
- கூடுதல் உதவி தேவைப்படுவோருக்குச் சமூக உதவி வழங்குவோம்