கொவிட்-19 கிருமிப்பரவலின் உடனடியான பாதிப்புகளுக்கு இடையில் தொழில் நிறுவனங்களை நிலைப்படுத்த, நாங்கள்:
ஒன்றிணைந்து நமது பொருளியலை உருமாற்றி, மேம்படுத்துவோம்
- ரொக்கப் புழக்கத்திற்கும், செலவுகளுக்கும், கடன் பெறுவதற்கும் உதவி புரிகிறோம்
- வாடகை நிவாரணத்திற்காகச் சட்டங்களை நிறைவேற்றினோம்
- ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்ட விமானத்துறை, ஹோட்டல்கள், பயணத்துறை, சில்லறை விற்பனை போன்ற துறைகளுக்குக் கூடுதல் உதவி வழங்குகிறோம்
இந்த உடனடி நெருக்கடிக்கு அப்பால் நாங்கள் கொவிட்-19 நிலவரத்திற்குப் பிந்திய பொருளியலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். அது எப்படி இருக்கும் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது. ஆனால், நமது நிறுவனங்களை உருமாற்றவும் ஊழியர்களை மேம்படுத்தவும் எங்களிடம் முற்போக்கான திட்டங்கள் உள்ளன. எது எப்படி இருந்தாலும், நாங்கள் துடிப்பும் மீள்திறனும் துரிதமாக இயங்கும் தன்மையும் மிக்க பொருளியலைக் கட்டமைப்போம்.
Source: The Straits Times © Singapore Press Holdings Limited.
நாங்கள்:
- எல்லா தொழில்துறைகளிலும் மின்னிலக்க உருமாற்றத்தைத் துரிதப்படுத்துவோம்
- நிறுவனங்கள் புத்தாக்கத்துடன் சூழலுக்கேற்பத் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள உருமாற்றம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் வழி உதவி புரிவோம்
- SMEகளுக்கான மின்னிலக்கமயமாதல் திட்டம், தொழில்நிறுவனங்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி நிதி, மற்ற மானியங்கள் ஆகியவற்றின் மூலம் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவளிப்போம்
- புதிய வளர்ச்சித் துறைகளை மேம்படுத்துவோம் – எடுத்துக்காட்டாகப் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம், உயிரியல் மருத்துவம், தகவல்தொடர்புத் தொழில்நுட்பம், நிபுணத்துவச் சேவைகள், மின்னிலக்கச் சேவைகள், இணையப் பாதுகாப்பு, உணவு உற்பத்தி, மருத்துவப் பராமரிப்பு, கல்வி போன்றவை.
நாங்கள்:
- பாதுகாப்பான பயணத்திற்காக மற்ற நாடுகளுடன் பச்சைத் தட ஏற்பாடுகளைச் செய்வோம்
- அனைத்துலக ஒத்துழைப்பை நாடி, நமது வர்த்தகக் கட்டமைப்புகளை விரிவுபடுத்தி, புதிய சந்தைகளைத் தேடிச் செல்வோம்
- உலகளாவிய மின்னிலக்கப் பொருளியலில் துடிப்புடன் பங்குபெறுவோம்
- நமது உணவு, அத்தியாவசியப் பொருள்களுக்கான மூலங்களைப் பன்மயமாக்கி, மீள்திறன் மிக்க விநியோகத் தொடர்புகளை உருவாக்குவோம்