ஒன்றிணைந்து வலுவான, மீள்திறன்மிக்க சமுதாயத்தைக் கட்டமைப்போம்

சமூக மீள்திறன்

கொவிட்-19 புதிய சமூக இடைவெளிகளை எடுத்துக்காட்டியபோதிலும், நம்மிடமுள்ள சிறந்த குணங்களை வெளிக்கொணர்ந்து, சிங்கப்பூரரின் அன்பான இதயத்தையு​ம் வெளிப்படுத்தியுள்ளது. நாங்கள் நமது சமூகப் பிணைப்பை வலுப்படுத்துவோம்.

நாங்கள்:

 • யாரும் பின்தங்கிவிடாமல், அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறக்கூடிய வலுவான, பரிவான, ஒற்றுமையான சமூகத்தைக் கட்டமைப்போம்.
 • மீள்திறனை வளர்த்து, சமூக முன்னேற்றத்தை மேம்படுத்தி, சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்போம்
 • வீழ்பவர்கள் வலுவுடன் மீண்டெழுவதற்கு உதவி புரிவோம்.

நாங்கள் நமது சமூகச் சேவை அமைப்புகளை வலுவாக்கி, ஆதரவளிப்போம்:

 • நிதி வழங்கீட்டையும் நன்கொடைகளுக்கான இணைநிதியையும் உயர்த்துவோம்
 • சமூக சேவை அமைப்புகள் தங்கள் செயற்பாடுகளையும் சேவை வழங்கும் முறையையும் உருமாற்ற உதவுவோம்

நாங்கள்:

 • நமது சமூகப் பாதுகாப்பு வலைகளை மேம்படுத்தி, நீடித்து நிலைக்கத்தக்க ஆதரவை வழங்குவோம்
 • தேவை உள்ளோருக்கு உதவி வழங்க, குடிமக்களோடும் அமைப்புகளோடும் இணைந்து செயல்படுவோம்
 • எஸ்ஜி கேர்ஸ் கட்டமைப்பின் வாயிலாக ஒவ்வொரு நகரிலும் பராமரிப்புச் சமூகங்களை அமைத்து, தேவைகளைத் தொண்டூழியர்களோடும் வளங்களோடும் இணைப்போம்
 • மன நலனில் முக்கியக் கவனம் செலுத்துவோம்
 • மின்னிலக்கப் பயன்பாட்டில் அனைவரும் இணைந்திருப்பதை ஊக்குவித்து, எளிதில் பாதிப்படையக்கூடிய பிரிவினர் இணையம்வழி ஆதரவையும் வளங்களையும் அடைவதற்குத் துணை புரிவோம்

நாங்கள்:

 • வேற்றுமையில் ஒற்றுமை நம் பலமாக இருக்கும் பல கலாச்சார, பல சமய சமுதாயத்தைக் கட்டமைப்போம்
 • நம் மக்களின் கலை, கலாச்சார, விளையாட்டு ஆர்வங்களுக்கு ஆதரவளிப்போம்

நிதியியல் மீள்திறன்

கொவிட்-19-ஐ எதிர்த்துப் போராட, நாங்கள் நான்கு வரவுசெலவுத் திட்டங்கள் வழி கிட்டத்தட்ட $100 பில்லியன் செலவிடுகிறோம். நடப்பு உபரிகளையும் கடந்தகால நிதியிருப்புகளையும் இதற்காகப் பயன்படுத்தி, இந்த நெருக்கடியைச் சிங்கப்பூரர்கள் கடந்து செல்லவும் எதிர்காலத்திற்கு அவர்களைத் தயார்ப்படுத்தவும் ஆதரவளிக்கிறோம். இதன் முழுப்பலனையும் நாம் அடைவதை உறுதி செய்வோம்.

நாங்கள்:

 • இந்தப் பணத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரர்களுக்காகவும் சிங்கப்பூருக்காகவும் வளர்ச்சியையும் பலன்களையும் விரைவுபடுத்துவோம்.
 • நிதியியல் விவேகத்தைக் கடைப்பிடித்து, எங்களால் முடியும்போது நிதியிருப்பை மீண்டும் நிரப்புவோம்
 • முன்னோடி, மெர்டேக்கா தலைமுறைகள் நமக்காகச் செய்ததைப் போலவே, நம் பிள்ளைகளுக்கும் எதிர்காலத் தலைமுறைகளுக்கும் வருங்காலத்தைப் பாதுகாப்போம்

முந்தையது

அடுத்தது

சுகாதாரம் & பாதுகாப்பு

வேலைகள் & பொருளாதாரம்

அன்புள்ளம்

நம்பிக்கை

ஒன்றிணைந்து

ஒன்றிணைந்து பராமரிப்பும்அக்கறையும் ஆதரவும் அளிப்போம்

⮜ முந்தையது

நீடித்து நிலைத்திருக்கும் வகையில் ஒன்றிணைந்து வாழ்வோம்

அடுத்தது ⮞

எங்கள் கொள்கை அறிக்கையின் ஒரு பிரதியைப் பெற

பதிவிறக்குஇணையத்தில் காட்டு