நீடித்து நிலைத்திருக்கும் வகையில் ஒன்றிணைந்து வாழ்வோம்

நமது செயல்கள் சுற்றுப்புறத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கொவிட்-19 நமக்கு எடுத்துக்காட்டியுள்ளது. நாங்கள் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையை வாழ்க்கை முறையாக்குவோம்.

நமது செயல்கள் சுற்றுப்புறத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கொவிட்-19 நமக்கு எடுத்துக்காட்டியுள்ளது. நாங்கள் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையை வாழ்க்கை முறையாக்குவோம்.

நாங்கள்:

  • கட்டடக் கூரைகளிலும் நீர்த்தேக்கங்களிலும் மேலும் அதிகமான சூரியஒளிப் பலகைகள் நிறுவியும், துவாஸ் நெக்சஸில் உணவுக் கழிவை எரிசக்தியாக மாற்றியும், தூய எரிசக்தியை மேலும் அதிகமாக உற்பத்தி செய்வோம்
  • சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் வாயு உமிழ்வுகளைக் குறைப்போம்
  • கரியமில வாயுவை உறிஞ்சும் தன்மையைப் பேணிக்காக்க ஒரு மில்லியன் மரங்களை நடுவோம். புதிய சதுப்புநிலப் பகுதிகளை உருவாக்குவோம்

நாங்கள் நகர்ப்பகுதியில் இயற்கையை அதிகமாகப் புகுத்துவோம்: நாங்கள்:

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் 200 ஹெக்டேர் இயற்கைப் பூங்காக்களையும் 140 ஹெக்டேர் நகர்ப்புறப் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களையும் அமைப்போம்.
  • ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 10 நிமிடம் நடந்துசெல்லும் தூரத்தில் ஒரு பூங்கா இருக்கும் வகையில், நமது பசுமைத் தாழ்வாரங்களையும் பூங்கா இணைப்புகளையும் மேம்படுத்துவோம்

நாங்கள்:

  • வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பசுமை நகரங்கள் திட்டத்துடன் நீடித்து நிலைக்கத்தக்க வாழ்க்கைக்கான புதிய கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்துவோம்
  • இல்ல மேம்பாட்டுத் திட்டம், அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டம், குடியிருப்புப் பேட்டைகளை உருமாற்றும் திட்டம் ஆகியவற்றுடன் நமது குடியிருப்புப் பேட்டைகளுக்குப் புத்துயி​ரூட்டுவோம்.
  • பருவநிலை மாற்றம், உயரும் கடல்நீர் மட்டம் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, கடலோரத்திலும் உள்நிலத்திலும் வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுவாக்குவோம்
  • “30க்குள் 30” விரைவு உத்தியுடன் உள்ளூர் உணவு உற்பத்தியைக் கணிசமாக அதிகரிப்போம். அதோடு, அத்தியாவசியப் பொருட்களின் நீண்டகால உள்ளூர் உற்பத்தி ஆற்றல்களை மேம்படுத்துவோம்

முந்தையது

அடுத்தது

சுகாதாரம் & பாதுகாப்பு

வேலைகள் & பொருளாதாரம்

அன்புள்ளம்

நம்பிக்கை

ஒன்றிணைந்து

ஒன்றிணைந்து வலுவான, மீள்திறன்மிக்க சமுதாயத்தைக் கட்டமைப்போம்

⮜ முந்தையது

நம் நகரத்தை ஒன்றிணைந்து நிர்மாணிப்போம்

அடுத்தது ⮞

எங்கள் கொள்கை அறிக்கையின் ஒரு பிரதியைப் பெற

பதிவிறக்குஇணையத்தில் காட்டு