மாறிவரும் உலகம்
புதிய அணி
மாறாத உறுதி

‘சிங்கப்பூர்’ என்ற இந்த அதிசயம் கூடுமானவரை
தொடரவேண்டும் என்பதில் நான் உறுதியாக
இருக்கிறேன். நான் உங்கள் எதிர்காலத்தோடு
விளையாட மாட்டேன். நம்மைச் சுற்றிலும் உள்ள
மாற்றங்களுக்கு நாம் ஈடுகொடுத்து ஆயத்தமாக
இருப்பதை உறுதிசெய்யும் அதேவேளையில்,
எனக்கு முன் இருந்தோர் அமைத்திட்ட
அடித்தளங்களைத் தொடர்ந்து மேம்படுத்துவேன்.
எங்கள் குழுவைத் தொடர்ந்து புதுப்பிப்பேன்
– ஒருமித்த இலக்கையும் சேவையாற்றும்
கடமையுணர்வையும் கொண்ட கடப்பாடும்
திறமாற்றலும் மிகுந்தோரை அழைத்து வருவோம்.
உங்களுக்கும் சிங்கப்பூருக்கும் சேவையாற்ற,
எங்களுக்கு உங்களுடைய ஆதரவு தேவை. எனக்கு
உங்களுடைய ஆதரவு தேவை.
- லாரன்ஸ் வோங்
ம.செ.க தலைமைச் செயலாளர்

இந்தக் கொள்கை அறிக்கை உங்களுக்கான எங்களுடைய வாக்குறுதி
உங்கள் நம்பிக்கை, அக்கறை, லட்சியம் ஆகியவற்றையும், நமது ஒருமித்த இலக்கை அடைவதற்கான எங்கள் செயல்திட்டங்களைையும் இது எடுத்துரைக்கின்றது.
எங்கள் கடப்பாடு தெளிவானது:
உங்களுக்குச் சேவையாற்றுவோம்; உங்களுக்கு ஆதரவளிப்போம்; உங்களுக்குத் துணைநிற்போம்.
நாங்கள் செய்வன அனைத்திலும் உங்களைையே முதன்மைப்படுத்துவோம்.

நமது பயணம்
60 ஆண்டாக, மக்கள் செயல் கட்சி உங்களுடன் உங்களுக்காகப் பணியாற்றி வந்துள்ளது. ஒன்றிணைந்து, நாம் சிங்கப்பூரை உருமாற்றி, பல தலைமுறையினரின் வாழ்வை மேம்படுத்தியுள்ளோம். அன்பு நிறைந்த இல்லமாகவும், அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த பெருநகரமாகவும் சிங்கப்பூரை உருவாக்கியுள்ளோம்.

மாறிவரும் உலகம் ...
உலகளாவிய மாற்றங்கள் பெருமளவு நிகழ்ந்து வருகின்றன. உலகப் பொருளியலுக்கும் அனைத்துலகப் பாதுகாப்புக்கும் அதனால் பேரளவு தாக்கங்கள் ஏற்படும் – சிங்கப்பூருக்கும்கூட.

புதியதோர் அத்தியாயத்தில் நாம்
எஸ்ஜி60 நம் நாட்டு நிர்மாணத்தில் ஒரு புதிய அத்தியாயம். நமது சமுதாய இணக்கத்தைப் புதுப்பிக்கவும், சிங்கப்பூர்க் கனவுக்குப் புத்துயிரூட்டவும் இது ஒரு பொன்னான வாய்ப்பு.

எங்கள் கடப்பாடு
வாழ்க்கைச் செலவினம், வேலைகள், வீடுகள் உள்ளிட்ட உங்கள் அக்கறைகள் பற்றி நாங்கள் அறிவோம். இவற்றையும் எதிர்காலச் சவால்களையும் எதிர்கொள்வதற்கும், எல்லாருக்கும் மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் உங்களுடன் இணைந்து மக்கள் செயல் கட்சி பணியாற்றும்.

ஒன்றிணைந்த முன்னேற்றம்
‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டம் உள்ளிட்ட பல தருணங்களில், உங்களுக்கு முக்கியமானவை குறித்து நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையும் லட்சியமும் செயல்வடிவம் பெற, நாங்கள் மேற்கொள்ளும் முறைமைகளை இத்தேர்தல் அறிக்கை எடுத்துரைக்கும்.
உங்கள் வாக்கையும் ஆதரவையும் நாடுகிறோம். ஒன்றிணைந்தால், நம்மால் நம் கனவை நனவாக்கமுடியும்!